வைப்பு நிதி அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
புதுச்சேரி: வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நிலுவை தொகையை வசூலிப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில், தலைமை அலுவலகம் மூலம் சிறப்பு பி.எப். தொகை வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி மண்டல கூடுதல் மத்திய ஆணையாளர் பங்கஜ் தலைமையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் நிலுவையில் உள்ள ரூ.80.4 கோடி பி.எப்., தொகையை வசூல் செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில், நிலுவை தொகையை மார்ச் 31ம் தேதிக்குள் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, புதுச்சேரி வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகளை வலியுறுத்தினார். நிலுவை தொகை செலுத்தாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.