இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம்
புதுச்சேரி: புதுச்சேரி போலீசில் 3 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, போக்குவரத்து (வடக்கு) பிரிவில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சைபர் கிரைம் பிரிவிற்கும், அங்கு பணியாற்றிய தியாகராஜன் கடலோர காவல்படை பிரிவிற்கும், கடலோர காவல் படை பிரிவில் பணியாற்றிய வேலயன் போக்குவரத்து (வடக்கு) பிரிவிற்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி., மோகன்குமார் வெளியிட்டுள்ளார்.