உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க அறிவுறுத்தல்

மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க அறிவுறுத்தல்

நெட்டப்பாக்கம்: தனியார் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டியின் அளவை நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க ஆணையர் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார். அவரது செய்திக்குறிப்பு:நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்தில் தனியார் திருமண மண்டபங்கள், திரையரங்குகள், தனியார் பள்ளிகள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சமையல் கூடங்கள், தங்கும் விடுதி கட்டடங்கள் அனைத்திலும் மழை நீர் சேகரிப்பு தொட்டியை கலெக்டர், உள்ளாட்சித்துறை பரிந்துரைப்படி அமைக்க வேண்டும். மீறினால் கட்டட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து நிறுவன உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் புதுபித்தல், புதிய நிறுவன உரிமம் வழங்கல் செயல்பாடுகள் தடை செய்யப்படும். ஏழு அலுவலக நாட்களுக்குள் ஆணையரை சந்தித்து விளக்கம் அளிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி