உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஒருங்கிணைந்த மேலாண்மை பயிற்சி

ஒருங்கிணைந்த மேலாண்மை பயிற்சி

வில்லியனுார் : வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பம் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் விவசாயிகளுக்கு காய்கறி சாகுபடியில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. ஆறு நாட்கள் நடந்த பயிற்சி முகாமில் 28 விவசாயிகள் பங்கேற்றனர். முகாமிற்கு எம்.எஸ்., சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் கிரிஜா தலைமை தாங்கினார். வில்லியனுார் வேளாண் அலுவலர் உமாராணி மற்றும் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதுநிலை ஆராய்ச்சியாளர் சரவணராமன் ஆகியோர் விவசாயிகளுக்கு வெண்டை, கத்திரி, கீரை வகைகள் மற்றும் கொடி வகைகளின் சாகுபடி முறைகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். முகாமில் காரைக்கால் பஜன்கோ விவசாய கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை