உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு 

பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு 

புதுச்சேரி: பிம்ஸ் மருத்துவ கல்லுாரியில் மேம்படுத்தபட்ட புதிய தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் ரேணு தலைமை தாங்கினார். மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பிம்ஸ் சேர்மன் ஜேக்கப், பொருளாளர் சூசன் தாமஸ் ஆகியோர் திறந்து வைத்தனர்.தீவிர சிகிச்சை பிரிவு அதிநவீன தொழில் நுட்பத்துடன் உயர்தர வசதிகளுடன் கூடிய வகையில் நிறுவப்பட்டுள்ளது. 11 படுக்கை வசதிகளுடன் நோயாளிகளின் வசதிகளுக்கேற்ப, அதிநவீன வெண்டிலேட்டர்கள், சுவாச பிரச்னைகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்பட்ட தொடர் இருதய ரத்த அழுத்தம் கண்காணிப்பு, தொற்று நோயை கட்டுப்படுத்த தனிப்பட்ட அறைகள், 24 மணி நேர தீவிர சிகிச்சை நிபுணர்கள், செவிலியர் மற்றும் ஊழியர்கள் குழு, சிறுநீரக நோயாளிகளுக்கு ஹிமோ டயாலிசிஸ் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளன.விழாவில், பொது மருத்துவ நிபுணர் நாயர் இக்பால், அச்சு ஜேக்கப், பொதுமேலாளர் ஜார்ஜ் தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !