கல்லுாரிகள் இடையே கிரிக்கெட் போட்டி ஆச்சார்யா கல்லுாரி அணி சாம்பியன்
புதுச்சேரி: புதுச்சேரி கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் ஆச்சார்யா கல்லுாரி சாம்பியன் பட்டம் வென்றது. புதுச்சேரி பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லுாரிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி, ராஜிவ் காந்தி மைதானத்தில் நடந்தது. இதில், 33 கல்லுாரி அணிகள் பங்கேற்றன. கடந்த ஜனவரி 20ம் தேதி முதல் 26ம் வரை லீக் போட்டி நடந்தது. இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அணி மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக அணி மோதின. முடிவில் ஆச்சார்யா கல்லுாரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதில், ஆச்சார்யா கல்லுாரியைச் சேர்ந்த 6 மாணவர்கள், தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை ஆச்சார்யா கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் அரவிந்தன், கல்லுாரி முதல்வர் உஷாதேவி ஆகியோர் பாராட்டினர். மாணவர்கள் மேலும் பல சாதனைகள் படைத்து விளையாட்டுத்துறையில் இந்திய அளவில் சாதிப்பவர்களாக மாற வேண்டும் என, அவர் பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்லுாரி துணை முதல்வர் நேத்திர பிரகாஷ், உடற்கல்வித் துறை இயக்குனர் அனித்ராஜ், ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.