மேலும் செய்திகள்
தி.மு.க., முப்பெரும் விழா
03-Feb-2026
ஜெ.பிறந்த நாள் விழா
25-Feb-2026
புதுச்சேரி: புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் உலக தாய்மொழி நாள், பாவாணர் பிறந்தநாள், நுால் வெளியீட்டு விழா நடந்தது. சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார். செயலர் சீனு மோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள்செல்வம், துணை செயலர் தினகரன் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் ராமலிங்கம் எழுதிய 'ஈழ அண்ணல் மாவை, கோ. சேனாதிராசா' என்ற நுாலை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டு வாழ்த்தி பேசினார். தொடர்ந்து, சிறந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில், தமிழ்மல்லன், ராமலிங்கம், ஹேமமாலினி, அருள்ராஜ், ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆட்சிக் குழு உறுப்பினர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆட்சிக்குழு உறுப்பினர்கள் உசேன், சிவேந்திரன், ஆனந்தராசன் ஆகியோர் செய்திருந்தனர்.
03-Feb-2026
25-Feb-2026