உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

 ஐ.எப்.இ.டி., கல்லுாரியில் சர்வதேச கருத்தரங்கம்

புதுச்சேரி: ஐ.எப்.இ.டி. பொறியியல் கல்லுாரியில் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்வி கழகம், ஐ.இ.இ.இ. நிதியுதவியுடன், 'அடுத்த தலைமுறை கணினியியலுக்கான தொழில் நுட்பங்கள் மற்றும் அமைப்புகள்' என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரியின் டிரஸ்டி சிந்து தலைமை தாங்கினார். முதல்வர் மகேந்திரன் அறிமுகவுரையாற்றினார். தொடர்ந்து, ஆய்வுக் கட்டுரை சுருக்கங்களின் தொகுப்பு வெளியிடப்பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழக மின் இயற்பியல் துறையின் பேராசிரியர் நாகராஜன், ஸ்ரீஹரி கோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் திட்ட இயக்குநர் சரவண பெருமாள் கருத்துரை வழங்கினர். ஸ்பெயின் நாட்டின் காஸ்டில்லா-லா- மஞ்சா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பவுஸ்டோ பெட்ரோ கார்சியா மார்க்வெஸ் 'ஆற்றல் உற்பத்தியில் செயற்கை நுண்ணறிவின் எதிர்கால நோக்கு' என்ற தலைப்பில் பேசினார். கல்லுாரியின் தலைவர் ராஜா, செயலாளர் சிவராம் ஆல்வா, பொருளாளர் விமல், டீன் அகாடெமிக்ஸ் கனிமொழி உட்பட பலர் பங்கேற்றனர். சி.எஸ்.இ., இணைத் தலைவர் சிவசங்கரன் வரவேற்றார். இ.சி.இ., தலைவர் ஜெயலட்சுமி மாநாட்டின் அறிக்கையை வழங்கினார். சி.எஸ்.இ., இணைத் தலைவர் திவ்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை