மேலும் செய்திகள்
போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
15-Sep-2024
புதுச்சேரி : வருமான வரி குறித்த இணைய விழிப்புணர்வு கருத்தரங்கில் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.சென்னை வருமான வரித்துறை டி.டி.எஸ்.,சரகம்-3 மற்றும் புதுச்சேரி இந்திய பட்டய கணக்காளர்களின் தென்னிந்திய பிராந்திய கவுன்சில் சார்பில் வருமானவரிப்பிடித்தம் குறித்த இணையவழி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. ஐ.சி.ஏ.ஐ.,யின் புதுச்சேரி கிளை தலைவர் ரஞ்சித்குமார் வரவேற்றார்.வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி இந்த விழிப்புணர்வு கருத்தரங்கத்தில், வருமான வரி அலுவலர்கள் செங்குட்டுவன், ராஜாராமன், தீபன் குமார், செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.வருமானவரி விதிகள், வரிப்பிடித்தம் செய்யும் வழிமுறைகள், வருமானவரிப்பிடித்தம் செய்பவரிகளின் கடமைகள், பொறுப்புகள் குறித்து விளக்கப்பட்டது.வரிப்பிடித்தம் விதிகளை முறையாக பின்பற்றவில்லை என்றால் எழும் சிக்கல்கள் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஜானகி கார்த்திகேயன் ட்ரேசஸ் தளம் குறித்து விளக்கம் அளித்தார். இந்த கருத்தரங்கத்தில் 75க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சேந்த வரிபிடித்தம் செய்பவர்கள் கலந்து கொண்டனர். வரிப்பிடித்தம் குறித்த துண்டு பிரசுரம், கையேடு, மென் நகல்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், ட்ரேசஸ் தளம் குறித்து, 16 தலைப்புகளில் , வருமானவரித்துறையின் அதிகாரபூர்வ யூடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள டி.டி.எஸ்., நண்பன் என்ற சாட்பாட் உபயோகத்தில் உள்ளது என தெரிவித்தனர்.நிகழ்ச்சியில் ஐ.சி.ஏ.ஐயின் புதுச்சேரி கிளை செயலாளர் மோகன்ராஜ், வருமான வரி ஆய்வாளர் சிற்றரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
15-Sep-2024