உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவிக்கு மிரட்டல்; கணவர் கைது

மனைவிக்கு மிரட்டல்; கணவர் கைது

அரியாங்குப்பம் ; மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கணவரை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பம் பழைய பூரணாங்குப்பம் வீதியை சேர்ந்தவர் மாதவதமிழ்ச்செல்வன்,39; இவர் தொடர்ந்து மது குடிப்பதால், கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், இவர்களுக்கிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டு, வாக்குவாதம் ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த, அவர் தனது மனைவி ஆனந்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.மனைவி கொடுத்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனர். அதையடுத்து, தலைமறைவாக இருந்த மாதவதமிழ்ச்செல்வனை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி