உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி மாடல் அழகி தற்கொலை கடன் தொல்லை காரணமா என விசாரணை

புதுச்சேரி மாடல் அழகி தற்கொலை கடன் தொல்லை காரணமா என விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி மாடல் அழகி தற்கொலை செய்தது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.புதுச்சேரி, காராமணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் சான் ரேச்சல், 26; மாடல் அழகி. இவர், ஓராண்டுக்கு முன், நுாறடி சாலை, ஜான்சி நகரைச் சேர்ந்த சத்யா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.ஜூன் 6ம் தேதி, ரேச்சல் அளவுக்கு அதிகமாக துாக்க மாத்திரை மற்றும் பி.பி., மாத்திரைகளை சாப்பிட்டு விட்டதாக, அவரது தந்தை காந்திக்கு தகவல் தெரிவித்துள்ளார். காந்தி உடனடியாக தன் மகளை மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, சிகிச்சையில் இருந்த ரேச்சல், மருத்துவரின் அனுமதியின்றி கடந்த 8ம் தேதி வீட்டிற்கு வந்தார்.இதையடுத்து, 13ம் தேதி ரேச்சலுக்கு திடீரென கை, கால், முகம் வீக்கம் அடைந்ததால், மூலக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக 20ம் தேதி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி ரேச்சல் நேற்று முன்தினம் இறந்தார்.உருளையன்பேட்டை போலீசாரின் விசாரணையில், பல்வேறு பேஷன் நிகழ்ச்சிகள் நடத்த ரேச்சல் கடன் பெற்றதாகவும், அது குறித்து தன் கணவரிடம் தெரிவிக்காமல், மன உளைச்சலில் இருந்ததாகவும், தன் மரணத்திற்கு கணவரோ, மாமியாரோ காரணமில்லை என கடிதம் எழுதி வைத்திருப்பதாக தெரிய வந்துள்ளது. எனினும், தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணம் உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.சான் ரேச்சல், மாடலிங் துறையில் மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் - 2019, மிஸ் டார்க் குயின் தமிழகம் - 2019, மிஸ் புதுச்சேரி - 2020, குயின் ஆப் மெட்ராஸ் - 2022, மிஸ் ஆப்ரிக்கா கோல்டன் இந்தியா - 2023 என பல்வேறு போட்டிகளில் பல விருதுகளை பெற்றுள்ளார்; மாடலிங் துறைக்கு வரும் பெண்களுக்கு பயிற்சியும் அளித்து வந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை