மேலும் செய்திகள்
Out of the Season ஆனாலும், தல for a Reason MS Dhoni
08-May-2025 | 1
புதுச்சேரி: போலி ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, புதுச்சேரியை சேர்ந்த நபர் ரூ.5.17 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.புதுச்சேரி, நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த நபரை, வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். இதைநம்பிய அவர் மர்மநபர் அனுப்பிய லிங்க் மூலம் ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் பல தவணைகளாக 5 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்துள்ளார்.ஆனால், அதில் கிடைத்த லாபப்பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.நைனார்மண்டபத்தை சேர்ந்த நபர் ஒருவர், ஆன்லைனில் வந்த விளம்பரத்தை பார்த்து, 'டீ கப் தயாரிப்பு இயந்திரம்' ஆர்டர் செய்துள்ளார். அதன்பின், அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆர்டர் செய்த இயந்திரத்தை டெலிவரி செய்ய, முன்பணம் செலுத்தும்படி கூறியுள்ளார்.இதையடுத்து, மர்மநபருக்கு ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்து 800 அனுப்பி உள்ளார். ஆனால், ஆர்டர் செய்த பொருள், இதுவரையில் அவருக்கு வந்து சேரவில்லை. மேலும், அந்த மர்மநபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.திருக்கனுாரைச் சேர்ந்த ஒருவரை, தொடர்பு கொண்ட மர்மநபர் குறைந்த வட்டியில் 5 லட்சம் வரை கடன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதைநம்பி, கடன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி மர்மநபர் தெரிவித்துள்ளார். அதன்படி, மர்மநபருக்கு திருக்கனுாரை சேர்ந்தவர் 49 ஆயிரத்து 500 செலுத்தி ஏமாந்துள்ளார்.முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ஆண் நபர், பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து 32 ஆயிரத்து 399 ரூபாய் இழந்துள்ளார்.இதன் மூலம் 4 பேர் சைபர் மோசடி கும்பலிடம் 9 லட்சத்து 64 ஆயிரத்து 699 ரூபாய் இழந்துள்ளனர்.இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
08-May-2025 | 1