உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மனைப்பட்டா வழங்கல்

இலவச மனைப்பட்டா வழங்கல்

புதுச்சேரி: கொம்பாக்கத்தைச் சேர்ந்த பயனாளிகளுக்கு முதல்வர் ரங்கசாமி இலவச மனைப்பட்டா வழங்கினார். வில்லியனுார் தொகுதி, கொம்பாக்கம் செங்கேணி அம்மன் கோவில், மெயின் ரோடு, சிமென்ட் களம், ஒட்டாம் பாளையம் மற்றும் செட்டிக்களம் சாலையோரங்களில் வசித்து வந்த 66 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில், தொகுதி எம்.எல்.ஏ., சிவா முன்னிலையில், முதல்வர் ரங்கசாமி இலவச மனைப்பட்டாவை பயனாளிகளுக்கு வழங்கினார். கலெக்டர் குலோத்துங்கன், நில அளவை பதிவேடுகள் துறை தாசில்தார் சந்தோஷ், வருவாய் ஆய்வாளர் பழனியம்மாள் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !