உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உதவித்தொகை ஆணை வழங்கல்

உதவித்தொகை ஆணை வழங்கல்

அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் தொகுதியில் 162 மீனவர்களுக்கு முதியோர் உதவித்தொகையை பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார்.புதுச்சேரி மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்த 162 மீனவர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் 7 பேருக்கு மானியத்தில் இன்ஜின் மோட்டார் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.அரியாங்குப்பம் காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பயனாளிகளுக்கு உதவித்தொகை மற்றும் மானியத்தில் இஞ்சின் மோட்டாருக்கான ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் துணை சபாநாயகர் பக்தவச்சலம், மீனவர் நலத்துறை ஆய்வாளர் சைமன், தேவ சேனாதிபதி, அருண்குமார், உதவியாளர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ