உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / உல்லாஸ் திட்ட தேர்வு சான்றிதழ் வழங்கல்

உல்லாஸ் திட்ட தேர்வு சான்றிதழ் வழங்கல்

புதுச்சேரி: புதுச்சேரி சேக்கிழார் அரசு உயர்நிலை பள்ளியில் உல்லாஸ் திட்ட தேர்வில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. புதுச்சேரி சேக்கிழார் அரசு உயர்நிலை பள்ளியில், கல்வித்துறை மற்றும் மாநில எழுத்தறிவு மையம் இணைந்து உல்லாஸ் திட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. உல்லாஸ் திட்டத்தில் 8 பேர் தேர்வெழுதினர். பங்கேற்ற 8 பேரும், 150க்கு 140 மதிப்பெண்ணிற்கு மேல் எடுத்து வென்றனர். தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு, தலைமை ஆசிரியர் பழனி தலைமை தாங்கினார். மேலாண்மை குழு தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். உல்லாஸ் தேர்வில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் அறிவழகன், கார்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி