உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சி.பி.ஐ., விசாரணை கோரி ஜே.சி.எம்., ஆர்ப்பாட்டம்

 சி.பி.ஐ., விசாரணை கோரி ஜே.சி.எம்., ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: போலி மருந்து தயாரித்தவர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த கோரி, ஜே.சி.எம்., மக்கள் மன்றம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரியில், போலி மருந்து தயாரிப்பு மற்றும் வினியோகத்தை கண்டித்தும், சம்பந்தபட்டவர்கள் மீது சி.பி.ஐ., விசாரணை நடத்த கோரியும், சட்டசபை அருகில் நேற்று காலை 11:00 மணியளவில், ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஜே.சி.எம்., மக்கள் மன்ற தலைவர் ரீகன் தலைமை தாங்கி, கண்டன உரை நிகழ்த்தினார். அங்காளன் எம்.எல்.ஏ., மற்றும் ரமேஷ் உட்பட மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவர்னர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி