மேலும் செய்திகள்
காலிப்பணியிடங்களை நிரப்ப மாவட்ட கலெக்டருக்கு மனு
04-Jun-2025
புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் 557 புதிய பணியிடங்களை உருவாக்கி, நிரப்ப மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை போன்று தேசிய முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றது. புதுச்சேரியில் மட்டுமின்றி, காரைக்காலிலும் ஜிப்மர் கிளை அமைந்துள்ளது. அடுத்து மாகி, ஏனாமிலும் ஜிப்மர் கிளையை துவங்க ஆயத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.இதுபோன்ற சூழ்நிலையில், ஜிப்மர் மருத்துவமனையில் புதிய மருத்துவ பணியிடங்களை அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டது. மொத்தம் 947 பணியிடங்களை உருவாக்க கோப்பு அனுப்பப்பட்டதில், 557 பணியிடங்களை உருவாக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.இதில் அதிகபட்சமாக 400 செவிலியர் பணியிடங்களை உருவாக்க அனுமதி தந்துள்ளது. மேலும் 36 சீனியர் உள்ளிருப்பு டாக்டர்கள், பணியிடங்களையும், 50 ஜூனியர் உள்ளிருப்பு டாக்டர்களையும் புதிதாக உருவாக்க அனுமதி அளித்துள்ளது. இந்த புதிய பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது.
04-Jun-2025