உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜிப்மர் பேராசிரியை தற்கொலை

ஜிப்மர் பேராசிரியை தற்கொலை

 புதுச்சேரி: ஜிப்மர் பேராசிரியர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்தவர் நிஷாந்த் பிளக்கல், 50; ஜிப்மர் மருத்துவ பேராசிரியர். இவரது மனைவி ராஜேஸ்வரி அகோரம்,48; ஜிப்மர் நியுராலஜி துறை தலைவர். இவர்களது மகள் கடந்தாண்டு நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து விட்டார். இதனால், ராஜேஸ்வரி அகோரம் கடுமையான மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மருத்துவகல்லுாரியில் உள்ள தனது அறையில், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது கணவர் நிஷாந்த் பிளக்கல் அளித்த புகாரின் பேரில் டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை