உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வெங்கடேஸ்வரா கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

வெங்கடேஸ்வரா கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி வளாகத்தில் 'கரியர் கனெக்ட் 2.0' என்ற மெகா வேலை வாய்ப்பு முகாமை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் துவக்கி வைத்தார்.அரியூர் வெங்கடேஸ்வரா கல்வி குழும சேர்மன் ராமச்சந்திரன், வழிகாட்டுதலின்படி 'கரியர் கனெக்ட் 2.0' என்ற மெக வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. துவக்க விழாவிற்கு கல்வி குழும நிர்வாக இயக்குனர் ராஜீவ்கிருஷ்ணா தலைமை தாங்கினார். கல்வி குழுமத்தின் செயலியக்க அதிகாரி வித்யா, கல்லுாரி பொதுமேலாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்வி குழுமத்தின் இயக்குனர் ரத்னசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் அமைச்சர் நமச்சிவாயம் வேலைவாய்ப்பு முகாமை துவக்கி வைத்தார்.வேலை வாய்ப்பு முகாமில் டி.வி.எஸ்., டேபிலேட் இந்தியா, அப்போலோ, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என 50க்கும் மேற்பட்ட மென்பொருள் நிறுவனங்கள், உயிரியல் மற்றும் மருத்துவப் பொறியியல் துறை நிறுவனங்கள், கணினி மற்றும் அறிவியல் துறை நிறுவனங்கள், மின்னணு மற்றும் தகவல் நிறுவனங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், மருந்தியல் நிறுவனங்கள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டது.முகாமில் கல்லுாரியை சேர்ந்த அனைத்து துறையில் இறுதியாண்டு மாணவர் மற்றும் 2024-25 ல் தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி மற்றும் தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு அதிகாரி ஆனந்தராஜ் மற்றும் குழுவினர் செய்தனர். மருந்தியல் துறை பேராசிரியை ஜீவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி