உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜான்குமார் எம்.எல்.ஏ.,  ஆய்வு 

ஜான்குமார் எம்.எல்.ஏ.,  ஆய்வு 

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதியில் போலீஸ் பூத் அமைய உள்ள இடத்தை ஜான்குமார் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். முதலியார் பேட்டை தொகுதிக்குட்பட்ட அனிதா நகர் பகுதியில் உள்ள 100 அடி ரோடு மேம்பாலத்தின் கீழ் காலி இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும்  போலீஸ் பூத் அமைக்கவும், நடைபயிற்சி பூங்கா அமைக்கவும் தொகுதி எம்.எல்.ஏ., ஜான்குமார் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு, தெற்கு எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன், புதுச்சேரி நகராட்சி உதவி பொறியாளர் வெங்கடாசலபதி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ