உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்டு, சர்க்கரை வழங்கல்

ஜோஸ் சார்லஸ் மார்டின் லட்டு, சர்க்கரை வழங்கல்

புதுச்சேரி: சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில், விநாயகர் சதூர்த்தியையொட்டி, 8 சட்டசபை தொகுதியில் பொதுமக்களுக்கு லட்டு, சர்க்கரை வழங்கப்பட்டன. சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின், புதுச்சேரி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், மணக்குள விநாயகர் கோவிலில் உள்ள விநாயகரை நேற்று வழிபட்டார். தொடர்ந்து, பக்தர்களுக்கு லட்டு வழங்கினார். தொடர்ந்து, காமராஜர் நகர், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை ஆகிய தொகுதியில், பிரமாண்டமான விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டன. பொதுமக்களுக்கு, லட்டு, சர்க்கரை பாக்கெட் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில், அமைச்சர் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான்குமார் எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, பரிவட்டம் கட்டி, மரியாதை செலுத்தப்பட்டது. பாகூர், தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள், இளைஞர்கள் வரவேற்பு அளித்தனர். மேலும், காலாப்பட்டு, திருபுவனை, உழவர்கரை, மங்கலம் ஆகிய சட்டசபை தொகுதியில், விநாயகர் சிலை வைத்து, வழிபாடு செய்யப்பட்டன. இதில், கலந்து கொண்ட பொதுமக்களுக்கு, சர்க்கரை பாக்கெட், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை