இளநிலை ஆய்வாளர் பணி தேர்வு
புதுச்சேரி: இளநிலை ஆய்வாளர் பணிக்கான தேர்வு எல்.டி.சி., யு.டி.சி., தேர்வு போல இருந்தது என தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர்.புதுச்சேரி கூட்டுறவு துறையில் உள்ள 38 இளநிலை ஆய்வாளர் பணிக்கான போட்டி தேர்வு 19 மையங்களில் நடந்தது. தேர்வு குறித்து தேர்வர்கள் கூறியதாவது; ஆங்கிலம், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், திறனறிதல், ஆடிட்டிங், கணக்கு பதிவியல் பாட பிரிவின் கீழ் 100 வினாக்கள் கேட்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் வினாத்தாளில் வரலாறு, நடப்பு நிகழ்வுகள் பிரிவுகளின் கீழ் அதிக கேள்விகள் கேட்கப்பட்டது.கணக்கு பதிவியல், ஆடிட்டிங் பாட கேள்விகள் குறைவாக இருந்தது. கடந்த 2005ம் ஆண்டு நடந்த தேர்வில் கணக்கு பதிவியல் தொடர்பான கேள்விகள் அதிகம் இருந்தது. இந்த முறை எல்.டி.சி., யு.டி.சி., தேர்வு போல இருந்தது. ஒட்டுமொத்த தேர்வு சற்று கடினமாக இருந்தது என தெரிவித்தனர்.