ஜோதி வள்ளலார் பள்ளி 10ம் வகுப்பில் சாதனை
புதுச்சேரி: காலாப்பட்டு ஜோதி வள்ளலார் மேல்நிலைப் பள்ளி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.பள்ளி அளவில் மாணவி ஜனனி 482 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், மாணவர் ரோஹித் 476 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர்கள் சஞ்சய், பாலமுத்து ஆகியோர் 474 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.பள்ளியில் 450 மதிப்பெண்களுக்கு மேல் 4 பேரும், 400க்கு மேல் 15 பேரும் பெற்று சாதனை படைத்துள்ளனர். பாட வாரியாக 80 முதல் 99 சதவீதம் வரை தமிழில் 24 பேரும், ஆங்கிலத்தில் 31 பேரும், கணிதத்தில் 17 பேரும், அறிவியலில் 28 பேரும், சமூக அறிவியலில் 19 பேரும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.பள்ளி அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவியரை பள்ளியின் தாளாளர் ராமலிங்கம், முதல்வர் சரஸ்வதி ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.