மேலும் செய்திகள்
'பீச்' வாலிபால் போட்டி; ஸ்ரீ ராமகிருஷ்ணா வெற்றி
10-Sep-2025
புதுச்சேரி: பள்ளி கல்வித்துறை வட்டம் 1 அளவிலான கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வட்டம்-1 அளவிலான கபடி போட்டி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் கடந்த 29ம் தேதி துவங்கியது. போட்டிகளில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், 17 வயதிற்கு உட்பட பிரிவில் 18 அணிகளும், 19 வயதிற்கு உட்பட பிரிவில் 8 அணிகளும், 14 வயதிற்கு உட்பட பிரிவில் 15 அணிகளும் கலந்து கொண்டன. இதில், 19 வயதிற்கு உட்பட பிரிவில் ஜீவானந்தம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடம், முருங்கப்பாக்கம் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. 17 வயதிற்கு உட்பட பிரிவில் வ.உ.சி., அரசு மேல்நிலைப் பள்ளி முதலிடம், ஜீவானந்தம் அரசு பள்ளி இரண்டாமிடம் பெற்றன. 14 வயதிற்கு உட்பட பிரிவில் வம்பாகீரப்பாளையம், தஷ்ணாமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளி முதலிடம், முத்தியால்பேட்டை காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி இரண்டாமிடம் பிடித்தன. தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை மணிமேகலை, சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ் இளவன், பாரதிதாசன் ஆகியோர் செய்திருந்தனர். நடுவர்களாக உடற்கல்வி விரிவுரையாளர்கள் பழனி, ரவிக்குமார், ஆசிரியர்கள் துரை, தன்ராஜ், சரவணன், டேவிட் ஆகியோர் செயல்பட்டனர்.
10-Sep-2025