உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் கிரைம் செய்திகள்

ரகளையில் ஈடுபட்ட 5 பேர் கைது: காரைக்கால் திருப்பட்டினம் கீழவாஞ்சூர் பழைய பிரவிடையான பாலம் அருகில் மதுபோதையில் ஆபாசமாக பேசிய நாகூர் வடக்கு பால்பண்ணச்சேரி பகுதியை சேர்ந்த அப்துல் வஹாப் மகன் முகமது ஜீபைல், 21; திருபட்டினம் போலீசார் கைது செய்தனர். அதேபோல் காரைக்கால் அம்பகரத்துார் காமராஜர் நகரில் மதுபோதையில் ரகளை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி,41; அம்பகரத்துார் போலீசார் கைது செய்தனர். நிரவி பெருமாள் கோவில் பேருந்து சந்திப்பில் குடிபோதையில் தகராறு செய்த அதைப்பகுதியை சேர்ந்த கண்ணன்,42; நிரவி போலீசார் கைதுசெய்தனர். மேலும் நெடுங்காடு சாலையில் போதையில் ரகளை செய்த, தரங்கம்பாடி மேமத்துாரைச் சேர்ந்த முருகன் மகன் கவுதமன், 21; திருவிளையாட்டம் பகுதியை சேர்ந்த வரதராஜன் மகன் ஆதவன், 23; ஆகிய இருவரையும் நெடுங்காடு போலீசார் கைது செய்தனர். மூதாட்டி மீது தாக்குதல்: காரைக்கால் திருநள்ளாறு சேத்துார் பண்டாரவடை மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி, 75; இவருக்கும், எதிர் வீட்டைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் முன்விரோதம் உள்ளது. கடந்த 9ம் தேதி காலை முத்துலட்சுமியின் வீட்டின் எதிரே பட்டாசு வெடித்த மணிகண்டனை மூதாட்டி கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், மூதாட்டியை திட்டி, கம்பால் தாக்கினார். இதில் காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் திருநள்ளாறு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை