உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் கிரைம் செய்திகள்

5 பேர் கைது: காரைக்காலில் மது போதையில் ரகளை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பட்டினம் ரயில்வே கேட் அருகில் மதுபோதையில் ரகளை செய்த நாகப்பட்டினம், அக்கரைபேட்டை சக்திவேல், 45, என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுப்போல் நிரவி விழிதியூர் சாலையில் உள்ள அரசலாறு அருகில் மதுபோதையில் ரகளை செய்த மதகடி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த பிரதீப்குமார், 26, என்பவரை போலீசார் கைது செய்தனர். திருநள்ளாறு மேலசுப்ராயபுரம் சாலையில் மதுபோதையில் ஆபாசமாகப் பேசிய அதேப்பகுதியை சேர்ந்த முருகேசன், 41, என்பவரை போலீசார் கைது செய்தனர். திருவேட்டக்குடி பிரதான சாலையில் மதுபோதையில் ரகளை செய்த கோட்டுச்சேரியை சேர்ந்த ராமதாஸ், 50; சரவணன், 34, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேர் மீது வழக்குப் பதிவு: நெடுங்காடு முத்துகுமார் மனைவி வனிதா. இவரது வீட்டின் அருகில் உள்ள மகேஷ், 38, என்பவர் அடிக்கடி மது அருந்திவிட்டு தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் வனிதா வளர்த்து வந்த நாய் மகேஷ் வீட்டிற்குள் சென்றது. இதனால் இருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மகேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கவுதமன், நித்தின் ஹென்றி ஆகியோர் மதுபோதையில் வனிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். வனிதா புகாரின் பேரில், மகேஷ், கவுதமன், நித்தின் ஹென்றி ஆகியோர் மீது நெடுங்காடு சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை