உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குருவிநத்தம் அரசுப் பள்ளியில்  கராத்தே பயிற்சி நிறைவு விழா 

குருவிநத்தம் அரசுப் பள்ளியில்  கராத்தே பயிற்சி நிறைவு விழா 

பாகூர் : குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், கராத்தே பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவில், தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். கணித பட்டதாரி ஆசிரியை கோமளா வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். ஆங்கில பட்டதாரி ஆசிரியை சாமுண்டீஸ்வரி, உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் பாராட்டி பேசினர். கராத்தே பயிற்சியாளர்கள் திருநாவுக்கரசு, பாக்கியலட்சுமி, பிரியதர்ஷினி ஆகியோர் தற்காப்புக் கலையின் அவசியம் குறித்துக் கருத்துரையாற்றினர். கராத்தே பயிற்சி பெற்ற எட்டு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள், கராத்தே கலையை நிகழ்த்திக்காட்டினர். பயிற்சியில் பங்கேற்ற மாணவிகளுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி