உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கப்பலில் கவியரங்கம் விருது வழங்கும் விழா

கப்பலில் கவியரங்கம் விருது வழங்கும் விழா

புதுச்சேரி: புதுச்சேரி புதிய துறைமுக கடலில் கப்பலோட்டிய தமிழன் நினைவு நாளை முன்னிட்டுக் கப்பலில் கவியரங்கம் மற்றும் நல்லாசிரியர் விருது வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு, சிறப்பு விருந்தினர்களாக சிவகங்கை சமஸ்தானத்தின் செயலர் குமரகுரு, புதுவை தமிழ் சங்கத்தின் செயலாளர் சீனு மோகனதாஸ், கப்பல் சுற்றுலா முன்னோடி சந்திரன், புதிய நீதிக் கட்சியின் அமைப்பாளர் தேவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவிற்கு ஓய்வு பெற்ற சுங்கத்துறை ஆய்வாளரும், இயக்கத்தின் நிறுவனர் கலைவரதன் தலைமை தாங்கினார். கவிஞர் அமுதா, அழகு, ஷர்மிளா, வெற்றிவேலன், ரத்தின விநாயகம் ஆகியோர் ஒருங்கிணைத்தினர். தொடர்ந்து பேராசிரியர் ரேவதி தலைமையில் செக்கிழுத்த கப்பலோட்டிய தமிழன் என்னும் தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. பின் நற்பணி ஆசிரியர் என்னும் விருது நல்லாசிரியர்களுக்கும், கவிதை வாசித்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை