சுப்ரமணிய பாரதி பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
புதுச்சேரி: திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது. பள்ளியின் நிர்வாகி சம்பத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுசிலா சம்பத் வரவேற்றார். நிர்வாக இயக்குனர் ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார். புதுச்சேரி சுயநிதி தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ரங்கநாதன், எம்.ஐ., கிட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திகா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுப்பாளர் கார்த்திக் மற்றும் டெலிவரி பொறுப்பாளர் ராம்போ ஆகியோர் மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இதில், எல்.கே.ஜி., முதல் 3ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலத் திறனை மேம்படுத்தும் பொருட்டு எம்.ஐ., கிட்ஸ் நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு, சிறந்த மாணவர்களுக்கு 'சிறந்த மாணவர் விருது' வழங்கப்பட்டது. பள்ளியின் நிர்வாகி சம்பத் பேசுகையில், 'மாணவர்களின் எதிர்கால கல்வி தேவையை இன்றே உணர்ந்து அவர்களுக்கு பல்துறை கற்றலை கற்பித்து சிறந்த மாணவர்களாக உருவாக்குவதே பள்ளியின் கடமையாக கொண்டு கல்வி சேவையை செய்து வருகிறோம்' என்றார். இதில், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிர்வாக இயக்குனர் மோகன்குமார் நன்றி கூறினார்.