உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சமையல் கூடத்தில் திருட்டு : கடலுார் வாலிபர் கைது

சமையல் கூடத்தில் திருட்டு : கடலுார் வாலிபர் கைது

பாகூர்: பாகூர் அருகே சமையல் கூடத்தின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய, பிரபல திருடனை, பொது மக்கள் கையும் களவுமாக பிடித்து, போலீசாரிடம் ஒப்படைத்தனர். பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாலன் 37; இவர், பின்னாசிகுப்பம் வி.ஐ.பி. நகரில் கொட்டகை ஒன்று அமைத்து சமையல் கூடம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று மதியம் இந்த சமையல் கொட்டகையின் பூட்டை உடைத்து, மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார். இதனை பார்த்தவர்கள், இது குறித்து வீரபாலனுக்கு தகவல் தெரிவித்தனர். வீரபாலன் அங்கு வந்து பார்த்தபோது, வாலிபர் ஒருவர் சமையல் கூடத்தின் உள்ளே இருந்த பொருட்களை திருடி கொண்டிருந்தார். தப்பியோட முயன்ற அந்த வாலிபரை, பொது மக்கள் உதவியுடன் பிடித்து, பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம், அந்த வாலிபரை பொது மக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த வாலிபர் கடலுார் அடுத்த கூத்தப்பாக்கம் முருகன் கோவில் தெருவை சேர்ந்த சுகன் (எ) சுகன்ராஜ் 26; என்பதும், இவர் மீது ஏற்கனவே புதுச்சேரி மற்றும் கடலுார் போலீஸ் நிலையங்களில் 5க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக, வீரபாலன் அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுகன்ராஜை கைது செய்து நீதிபதியின் முன்பு ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ