அறிந்ததும் அறியாததும் வினாடி - வினா
புதுச்சேரி: தானம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் 'அறிந்ததும் அறியாததும்' என்ற தலைப்பில் வினாடி - வினா நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை தமிழ்மலர் தலைமை தாங்கினார். ஆசிரியை சத்யாவதி வரவேற்றார். பணி நிறைவு பெற்ற விரிவுரையாளர் சேலியமேடு சபாபதி நடுவராக இருந்து 'அறிந்ததும் அறியாததும்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடங்கிய வகையில், வினாடி - வினா நிகழ்ச்சி நடத்தினார். சிறப்பான முறையில் பதில் கூறிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். முன்னதாக, ஆசிரியை இந்துமதி சிறப்புரையாற்றினார். துர்காதேவி வாழ்த்தி பேசினர். ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.