உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆராதனை விழா

கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆராதனை விழா

புதுச்சேரி: பிரம்மஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் 31வது ஆண்டு ஆராதனை விழா இன்று (7ம் தேதி) நடக்கிறது. மொரட்டாண்டி டோல்கேட் அருகில், உள்ள விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவில், லலிதாம்பிகை வேதசிவாகம டிரஸ்ட், தட்சணாமூர்த்தி, 18, சித்தர் மகா மண்டபத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 9:00 மணிக்கு வச்சலா சிதம்பரகுருக்கள் தலைமையில், கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் திரு உருவச்சிலைக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து, கீதாராம சாஸ்திரிகள் தலைமையில், மகா கணபதி ேஹாமம், மிருத்யுஞ்ஜய ேஹாமம், ஆயுஷ்ய ேஹாமம், நவக்கிரக ேஹாமம் நடக்கிது. காலை 10:00 மணிக்கு மொரட்டாண்டி பிரத்யங்கரா காளி கோவில் நிறுவனர் நடாத்துார் ஜனார்த்தன சுவாமிகள், சித்தார்த், ஸ்ரீனிவாசன், கல்யாணம், வேதராமன் நாகராஜன், சுவாமிநாதன், முரளிராஜகோபால், ஆனந்தபத்மநாபன், சீத்தாராமன், ரகோத்தமன், ரவி, கிருஷ்ணமூர்த்திகள் மலர் அஞ்சலி, புஷ்ப வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து 11:30 மணிக்கு சாம வேத பாராயணம், 12:00 மணிக்கு குரு ஆராதனை, 1:30 மணிக்கு பந்துமித்ர போஜனம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி