மேலும் செய்திகள்
வருஷாபிஷேகம்
15-Dec-2025
புதுச்சேரி: திலாஸ்பேட்டை காந்தி நகர், செல்வ விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக முதலாம் ஆண்டு பூர்த்தியையொட்டி, சுவாமிக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இவ்விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வரா பூஜை, கலசஸ்தாபனம், முதற்கால பூஜை, மூல மந்த்ர மாலா, மந்த்ரா ஹோமம், திரவியாகுதி, மஹா பூர்ணாகுதி, உபசாரங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து,நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை, மகா அபிேஷகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, விநாயகருக்கு தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியில், முதல்வர் ரங்கசாமி, அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, சமுதாய நலக்கூடத்தில், சமபந்தி நடந்தது. பின்னர், சாமி வீதியுலா நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
15-Dec-2025