உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

வில்லியனுார் : ஜி.என். பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.வில்லியனுார் ஜி.என்., பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவிலில், மாரியம்மன், ஐயனாரப்பன், பிடாரி அம்மன் சுவாமிகளுக்கு புதிதாக தனித்தனி சன்னதிகள் அமைத்துள்ளனர். இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று காலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது.காலை 11:00 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் குரு மகா சன்னிதானம் சிவஞானபாலய சுவாமிகள் பங்கேற்று யாகசாலை பூஜைகளை துவக்கி வைத்தார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திருப்பணி கமிட்டி தலைவர் ராமசாமி, கோவில் நிர்வாக அலுவலர் அன்பழகன், உறுப்பினர் காத்தவராயன் உட்பட பலர் பங்கேற்றனர். இன்று காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை