உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் குத்து விளக்கு பூஜை

 கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் குத்து விளக்கு பூஜை

புதுச்சேரி: புதுச்சேரி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் குத்து விளக்கு பூஜை நடந்தது. புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அக்னி பிரவேச வைபவம் மற்றும் குத்துவிளக்கு பூஜை துவங்கி, நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் ஆராதனைகள் நடந்து வந்தது. நேற்று முன்தினம் தை மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, மாலை 6:00 மணிக்கு குத்து விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி, அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை