ஈஷரம் திட்டத்தில் பதிவு செய்ய தொழிலாளர் துறை அறிவுறுத்தல்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தொழிலாளர்கள் ஈஷரம் திட்டத்தில் பதிவு செய்ய தொழிலாளர் துறை கேட்டுக் கொண்டுள்ளது. தொழிலாளர் துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் பணிபுரியும் சுய தின தொழிலாளர்கள், ஆன்லைன் தள தொழிலாளர்கள், ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள், தேவைக் கேட்ப தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்களுக்காக நலத்திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் (Platform / GIG Workers register on e Shram) ஈஷரம் வலை தளத்தை உருவாக்கியுள்ளது. புதுச்சேரி தொழிலாளர் துறை, இத்திட்டத்தில் பயனாளியாக இணைய சிறப்பு முகாம் இன்று25ம் தேதி முதல் வரும் 5ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அனைத்து பொது சேவை மையங்களில் நடைபெற உள்ளதால், 16 வயது முதல் 59 வயதிற்குள் உள்ளவர்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், ஆதாருடன் இணைக்கப்பட்ட தொலைபேசி எண் எடுத்து வந்து இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 1800-599-8050 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.