கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி
காரைக்கால்: காரைக்காலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட விவசாயி மயங்கி விழுந்து உயிழந்தார். திருவாரூர் நன்னிலம் காளியாகுடியை சேர்ந்த சௌந்தராஜ், 74; இவர் கூலி வேலை செய்து வருகிறார்.இவருக்கு சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்த நோய் உள்ளது. நேற்று முன்தினம் சௌந்தராஜ் பஸ் மூலம் காரைக்கால் நெடுங்காடு வந்துள்ளார். பின்னர் வெயில் தாக்கம் அதிகம் காணப்பட்டதால் கடைத்தெருவில் உள்ள பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்தார். தகவல் அறிந்த நெடுங்காடு போலீசார் சௌந்தராஜ் உடலை அரசு மருந்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.