உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி வழக்கு

ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி வழக்கு

ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது புதுச்சேரி: ஆள்மாறாட்டம் செய்து ரூ. 5 கோடி மதிப்பிலான நிலத்தை பலருக்கு விற்பனை செய்து மோசடி செய்த வழக்கில், ரியல் எஸ்டேட் புரோக்கர் கைது செய்யப்பட்டார்.ரெட்டியார்பாளையம் சிவகாமி நகரில் வசித்து வந்த அ.தி.மு.க., பிரமுகர் பிரியா (எ) பச்சையம்மாள், கடந்த 2001ம் ஆண்டு இறந்தார். இவர் கடந்த 1998ம் ஆண்டு வில்லியனுார், ஒதியம்பட்டு கிராமம், நித்யா பேக்கேஜிங் கம்பெனி அருகில் 14,400 சதுர அடி நிலத்தை வாங்கி தனது பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார்.பிரியா இறந்த தகவல் தெரிந்து கொண்ட கணுவாபேட்டை முனியன் மற்றும் சிலருடன் சேர்ந்து பிரியா (எ) பச்சையம்மாள் பெயரில் ஆள் மாறாட்டம் செய்து, அந்த இடத்தை தனது பெயரில் பொது அதிகாரம் பெற்றார். பின், அதனை பல மனைகளாக பிரித்து பலருக்கு விற்பனை செய்தார்.வில்லியனுார் சப்ரிஜிஸ்டர் பாலமுருகன், சி.பி.சி.ஐ.டி., பிரிவில் புகார் அளித்தார். மோசடி வழக்கு பதிவு செய்த போலீசார், கணுவாப்பேட்டை முனியன், 40; காந்தி (எ) நிக்கல்குமார், 48; பிரியா பெயரில் ஆள்மாறாட்டம் செய்த கடலுார் புதுப்பாளையம் சங்சீவி மனைவி சூர்யா, 53. ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.சூர்யாவிடம் நடத்திய விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்ய, ரியல் எஸ்டேட் புரோக்கர், வில்லியனுார் கணுவாபேட், புதுநகர், 7 வது குறுக்கு தெருவைச் சேர்ந்த வடிவேல், 38; உதவியதும், பிரியா பெயரில்போலியான ஆதார் கார்டு எடுத்து கொடுத்ததும் தெரியவந்தது.சி.பி.சி.ஐ.டி., போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்இன்ஸ்பெக்டர் லியாகத்அலி தலைமையிலான போலீசார் வடிவேலை நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ