உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லங்காடி போட்டி: புதுச்சேரி மாணவர்கள் சாதனை

 லங்காடி போட்டி: புதுச்சேரி மாணவர்கள் சாதனை

புதுச்சேரி: நேபாளத்தில் நடந்த ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டியில், புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் சார்பில், பங்கேற்ற 9 மாணவர்கள், தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். ஆசிய அளவிலான பாக்ஸ் லங்காடி போட்டி நேபாளத்தில் நடந்தது. இதில், புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் சார்பில், பங்கேற்ற 9 மாணவர்கள், தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்கள்,முதல்வர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது,முதல்வர் ரங்கசாமி,ஒவ்வொரு மாணவர்களுக்கும் பதக்கம்அணிவித்து, சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசுகையில், 'இதுபோல் இன்னும் பல தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று புதுச்சேரிக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும். அதற்கு புதுச்சேரி அரசு எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்' என்றார். இந்நிகழ்வில்,புதுச்சேரி பாக்ஸ் லங்காடி அசோசியேஷன் தலைவர் ஏகாம்பரம், செயலாளர் மாறன், பயிற்சியாளர்கள் வீரன், பஞ்சாட்சலம், நிர்வாகிகள் பாலு, பூபாலன், கிருஷ்ணன், சக்திவேல், சுரேந்திரன், பழனி, ராஜா, அரிகிருஷ்ணன், சத்தியா, தேவா, இளவேந்தன் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை