பணியாளர் தேர்வாணைய நேரடி தேர்வு விண்ணப்பிக்க ஜூன் 23 கடைசி நாள்
புதுச்சேரி : மத்திய அரசின் பணியாளர் தேர்வாணைய 2025க்கான நேரடி போட்டி தேர்விற்கு விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாள் ஆகும்.கலெக்டர் குலோத்துங்கன் செய்திக்குறிப்பு;இந்திய அரசின் பணியாளர்கள் பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு பதவிகளுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பொருட்டு 2025க்கான நேரடி போட்டி தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த 2ம் தேதி வெளியிட்டுள்ளது.இத்தேர்வுகள் ஜூலை மாதம் 24ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி வரை தற்காலிகமாக நடைபெற உள்ளது. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறை, தேர்வின் திட்டம், வயது, அடிப்படை கல்வித் தகுதி, தேர்வு கட்டணம் போன்ற வை பற்றிய குறிப்புகள் பணியாளர் தேர்வாணையத்தின் (https:ssc.gov.in/rhq-selection-post/rhq-post-details) என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் https://ssc.gov.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள், ஜூன் 23ம் தேதி இரவு 11;00 மணி) மற்றும் ஆன்லைன் தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள் ஜூன் 24ம் தேதி இரவு 11;00 மணி.இத்தேர்வுகள் இந்தியாவின் தென்பகுதியில் மொத்தம் 24 மையங்கள் மற்றும் நகரங்களில் (ஆந்திரபிரதேசம் -12 புதுச்சேரி -1,தமிழ்நாடு -8, தெலுங்கானா -3) நடைபெற உள்ளது. புதுச்சேரியை சேர்ந்த தகுதியுள்ள பட்டதாரிகள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.