உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கதிர்காமம் மருத்துவ கல்லுாரியில் தொழுநோய் பிரிவு துவக்கம்

 கதிர்காமம் மருத்துவ கல்லுாரியில் தொழுநோய் பிரிவு துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு நலவழித்துறை, தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லுாரியில் தொழுநோய் பிரிவு நேற்று துவங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் தலைமை தாங்கி, தொழுநோய் பிரிவை துவக்கி வைத்தார். மருத்துவக்கல்லுாரி இயக்குநர் உதயசங்கர் முன்னிலை வகித்தார். தேசிய தொழுநோய் திட்ட உதவி இயக்குனர் சிவராமன், மருத்துவக் கல்லுாரி தலைமை மருத்துவர்கள் சரிதா, ரம்யா மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். மருத்துவக்கல்லுாரி வெளிப்புற தோல் சிகிச்சை பிரிவில், தொழுநோய் குறித்த சிகிச்சை, பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வுக்கான, சிறப்பு தொழுநோய் சிகிச்சை பிரிவானது இயங்கும். புறநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களில் மட்டும் காலையில் இயங்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ