உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மழை நீர் தேங்குவதை தடுக்க சாலையில் லெவல் பார்க்கும் பணி

 மழை நீர் தேங்குவதை தடுக்க சாலையில் லெவல் பார்க்கும் பணி

புதுச்சேரி: கடற்கரை சாலையில் மழை நீர் வெளியேறுவதற்கு சாலையை மேம்படுத்த 'லெவல்' பார்க்கும் பணி நடந்தது. மழைக்காலங்களில் புதுச்சேரி கடற்கரை சாலையில் பல இடங்களில் மழை நீர் வெளியேற முடியாமல் நீண்ட துாரத்திற்கு தேங்கி நிற்கிறது. இதனால் கடற்கரை சாலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் நகராட்சி அருகில் உள்ள கடற்கரை சாலையில் மழை நீர் வெளியேறாமல் உள்ளது குறித்து விமர்சனங்கள் எழுகிறது. அதையொட்டி இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலை பிரிவு சார்பில், கடற்கரை சாலையில் தேங்கும் மழை நீர் உடனடியாக கடலுக்கு செல்லும் வகையில் வாய்க்கால் அமைக்கவும் மற்றும் சாலையை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடற்கரை சாலையில் (பழைய சாராய ஆலை) கவர்னர் மாளிகை துவங்கி டுப்ளெக்ஸ் சிலை வரை 1500 மீட்டருக்கு சாலையை 'லெவல்' (மட்டம்) பார்க்கும் பணியில் நேற்று தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்தப் பணியினை பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை