உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நுாலக உதவியாளர் பணி தேர்வு முடிவு வெளியீடு 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

 நுாலக உதவியாளர் பணி தேர்வு முடிவு வெளியீடு 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

புதுச்சேரி: நுாலக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு வரும் 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதுகுறித்து புதுச்சேரி தேர்வு அமைப்பின், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா விடுத்துள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரி கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் உள்ள 26 இளநிலை நுாலக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 1 கேலரி அசிஸ்டென்ட் என, மொத்தம் 27 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்படது. இப்பணிக்கு மொத்தம் 21,688 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 31ம் தேதி மாநிலம் முழுதும் 59 மையங்களில் நடந்தது. இத்தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 53.53 சதவீதம் பேர் அதவது 10,078 பேர் மட்டுமே எழுதினர். தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்புகள் ஆட்சேர்ப்பு இணையதளமான https://recruitment.py.gov.in- ல் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடமிருந்து ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் பெறப்பட்டன. ஆட்சேபனைகள் பரிசீலிக்கப்பட்டு, விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்த பின், இளநிலை நுாலக உதவியாளர் மற்றும் காட்சியக உதவியாளர் பணியிடங்களுக்கான தற்காலிகமாக பரிசீலனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இவர்களுக்கான, சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 12ம் தேதி புதுச்சேரி, தலைமைச் செயலகம், ஏ- பிளாக், மூன்றாம் தளத்தில் உள்ள கருத்தரங்க கூடத்தில், காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது. அதன்பின் இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ