உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மது, இறைச்சி கடைகள் இன்று மூட உத்தரவு

மது, இறைச்சி கடைகள் இன்று மூட உத்தரவு

புதுச்சேரி: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று மதுக்கடைகள், பார்கள் மற்றும் இறைச்சி கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலத்தில் இன்று மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையொட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து சாராயம், கள் மற்றும் மதுக் கடைகள், பார்கள் இன்று 10ம் தேதி மூடப்பட்டிருக்க வேண்டும். மீறுவோர் மீது கலால் சட்ட விதி1970ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலால் துணை ஆணையர் மேத்யூஸ் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். அதேபோன்று இறைச்சி, மீன் மற்றும் இதர மாமிசங்கள் இன்று விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. மீறி செயல்படும் கடைகள் 'சீல் வைக்கப்படும். கடையில் உள்ள இறைச்சி, மீன் மற்றும் தராசு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்து, கடை உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை