உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மது, இறைச்சி கடைளை நாளை மூட உத்தரவு

மது, இறைச்சி கடைளை நாளை மூட உத்தரவு

புதுச்சேரி : காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை மது மற்றும் இறைச்சி கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கலால் துறை தாசில்தார் ராஜேஷ்கண்ணா, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன் ஆகியோர் தனித்தனியே விடுத்துள்ள செய்திக்குறிப்பு: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை 2ம் தேதி மாநிலத்தில் உள்ள அனைத்து சாராயம், கள் உள்ளிட்ட அனைத்து மதுக்கடைகள் மற்றும் மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்று, அனைத்து மதுக்கடைகளிலும் மூடப்பட்டிருக்க வேண்டும். மீறுவோர் மீது, கலால் சட்ட விதிகளின் கீழ் ந டவடிக்கை எடுக்கப்படும். உழவர்கரை நகராட்சி கமிஷனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், அவர்கள் விற்பனைக்கு வைத்துள்ள இறைச்சி உள்ளிட்ட மாமிசங்கள் மற்றும் கருவிகள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை