உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சட்டபை கூட்டத்தொடர் நேரலையில் ஒளிப்பரப்பு 

சட்டபை கூட்டத்தொடர் நேரலையில் ஒளிப்பரப்பு 

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை நிகழ்வுகள் புதுச்சேரி துார்தர்ஷன் சேனலிலும், சமூக வலைதளங்ளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இது குறித்து சட்டசபை செயலர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: புதுச்சேரி சட்டசபையின் 16-வது முதல் கூட்டத்தொடரில் இன்று மாலை 3:00 மணிக்கு முதல்வர் ரங்கசாமி, 2026-27ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கின்றார். இதனை சமூக ஊடகங்களான யூ டியூப், எக்ஸ் தளம், பேஸ்புக் மூலம் நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி துார்தர்ஷன் தொலைக்காட்சி, முதல்வர் பட்ஜெட் உரையினை நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளது. சட்டசபை நிகழ்வுகளை பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை