ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் லெனின் வீதியில் ஓட்டு சேகரிப்பு
வில்லியனுார்: நெல்லித்தோப்பு தொகுதி ல.ஜ.க., வேட்பாளர் லெனின் வீதியில் ஓட்டு சேகரித்தார். தே.ஜ., கூட்டணி சார்பில், நெல்லித்தோப்பு தொகுதியில் ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் போட்டியிடுகிறார். அவர் நேற்று காலை லெனின் வீதியில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது, அவருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலையில் லெனின் வீதி மற்றும் காராமணிக்குப்பம் பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று மத்திய மாநில அரசுகளின் சாதனைகளை எடுத்துக் கூறி தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். ஓட்டு சேகரிப்பின் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்., அ.தி.மு.க., பா.ஜ., நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.