உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் கீர்த்தி நகரில் ஓட்டு சேகரிப்பு

 ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமார் கீர்த்தி நகரில் ஓட்டு சேகரிப்பு

வில்லியனுார்: நெல்லித்தோப்பு தொகுதி ல.ஜ.க., வேட்பாளர் ஜெயக்குமாரை ஆதரத்து, கீர்த்தி நகர் மற்றும் அண்ணா நகர் பகுதியில் அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் நிர்வாகிகள் தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மற்றும் வேட்பாளர் ஜெயக்குமாருக்கு பெண்கள் மலர் துாவி, ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். பொதுமக்களிடம் வேட்பாளர் ஜெயக்குமார் பேசுகையில், 'நெல்லித்தோப்பு தொகுதியில் என்னை வெற்றி பெற செய்தார், ஏழை எளிய குடுத்தை சேர்ந்த திருமண மணமகளுக்கு ஒரு லட்சம் நிதியுதவி, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு லேப்டாப் இலவசமாக வழங்கப்படும். தொகுதியில் முழு நேரமும் செயல்படும் ஆம்புலன் வசதி ஏற்படுத்திகொடுப்பேன்' என்றார். ஓட்டு சேகரிப்பின் போது லட்சிய ஜன நாயக கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்., பா.ஜ., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை