உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாட்டரி சீட்டு விற்பனை: 2 பேர் கைது 

லாட்டரி சீட்டு விற்பனை: 2 பேர் கைது 

புதுச்சேரி: சோலை நகரில் மூன்று நம்பர் லாட்டரி விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சோலை நகர் அரசு பெண்கள் பள்ளி அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அதில், தடை செய்யப்பட்ட கேரளா மாநிலத்தை சேர்ந்த மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் நடத்த விசாரணையில் சோலை நகர், தனலட்சுமி கார்டனைச் சேர்ந்த தரணி (எ) பால்ராஜ், 49; என்பது தெரியவந்தது. அவர் அளித்த தகவலின் பேரில், முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகரை சேர்ந்த மணிகண்டன், 30; என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, 2 பேரிடம் இருந்து 3 மொபைல் போன்கள், ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின், கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை