உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  லாட்டரி சீட்டு விற்றவர்  கைது

 லாட்டரி சீட்டு விற்றவர்  கைது

புதுச்சேரி: லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர். வில்லியனுார், கோட்டைமேடு மயான பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பொதுமக்களிடம் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், கணுவாப்பேட்டை சேர்ந்த வேல்முருகன், 39, என்பதும், இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 1,500 ரொக்கப்பணம், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை